Consult Online
Book an Appointment
  • Calcutta Medical Research Institute 7/2 Diamond Harbour Road Kolkata-700027, West Bengal

கொல்கத்தாவில் தடுப்பூசி போட்டுக்கொண்ட 101 வயது முதியவர்: தடுப்பூசி தொடர்பான வதந்திகளை யாரும் நம்பக்கூடாது என பேட்டி

கொல்கத்தா, 
இந்தியாவில் 2-ம் கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட நோயாளிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கடந்த 1-ந்தேதி தொடங்கிய இந்த திட்டத்தின் பயனாளர்கள் ஏராளமானோர் தினந்தோறும் தடுப்பூசி போட்டு வருகின்றனர்.

அந்தவகையில் கொல்கத்தாவில் நேற்று தாரா சந்திரா மகேஷ்வரி என்ற 101 வயது முதியவர் தடுப்பூசி போட்டுக்கொண்டார். இந்தியாவில் தடுப்பூசி போட்டுக்கொண்ட மிகவும் மூத்தவர் இவர் என கருதப்படுகிறது.
இந்த வயதிலும் தாரா சந்திராவுக்கு எந்தவித பெரிய நோய் எதுவும் இல்லை. தடுப்பூசி போடப்பட்ட பிறகும் அவருக்கு எந்தவித பக்க விளைவுகள் எதுவும் இல்லை. இதனால் அவர் மிகுந்த மகிழ்ச்சியை வெளியிட்டார்.
அவர் கூறும்போது, ‘தடுப்பூசியின் வருகைக்காக நான் மிகவும் ஆவலுடன் காத்திருந்தேன். தற்போது அது வந்தவுடன் எந்தவித பயமும் இன்றி போட்டுக்கொண்டேன். இந்த தடுப்பூசி எனது உடலில் மிகுந்த பலனை கொடுக்கும் என உறுதியாக நம்புகிறேன். இதை வெறும் டெட்டனஸ் தடுப்பூசி போலவே உணர்கிறேன். தடுப்பூசி போட்டபின் சாதாரண சோர்வை தவிர வேறு எதுவும் எனக்கு ஏற்படவில்லை. தடுப்பூசி தொடர்பான வதந்திகளை யாரும் நம்பக்கூடாது’ என்று https://www.dailythanthi.com/News/TopNews/2021/03/11023618/Kolkata101yearold-man-takes-COVID19-vaccine-shot-at.vpf

Leave a Reply

Your email address will not be published.

You may use these <abbr title="HyperText Markup Language">HTML</abbr> tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*

Hi, How Can We Help You?